தெய்வச்செயல்புரம் அருகே திருவேங்கடபுரம் நடுத்தெருவைச் சேர்நதவர் இசக்கி மகன் சங்கரன்(38). இவர் தூத்துக்குடியில் லாரி டிரைவராக உள்ளார். இவரது மனைவி ரத்தினம்(32). இவர்களுக்கு அதிசயா(9), சுபஸ்ரீ(6) என இரண்டு மகள்கள் உள்ளனர்.
தம்பதியினரிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. நேற்று மாலை குடிபோதையில் வீட்டுக்கு வந்த சங்கரன், ரத்தினத்தை திட்டியுள்ளார். இது அவர்களிடையே கைகலப்பானது. இதனால் மனமுடைந்த சங்கரன் வீட்டில் வைத்திருந்த மண்ணெண்ணெயை உடலில் ஊற்றி தீவைத்து கொண்டார். அவரை அவரது மனைவி ரத்தினம் காப்பாற்ற முற்பட்டார். அப்போது அவர் மீது தீபற்றியது. இவர்களது அலறல் சத்தம் கேட்டு அக்கப்பக்கத்தில் இருந்தவர்கள் தம்பதியினரை மீட்டு 108 மூலம் திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். இன்று காலை அவர்கள் இருவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.


