ஸ்ரீவைகுண்டம் அங்காள பரமேஸ்வரி கோயில் கொடை விழாவில் திரளான பக்தர்கள் பால்குடம் எடுத்து சுவாமி தரிசனம் செய்தனர்.
ஸ்ரீவைகுண்டத்தில் கள்ளர் சமூதாயத்திற்கு பாத்தியப்பட்ட அங்காள பரமேஸ்வரி முத்து பேயன் திருக்கோயில் கொடை விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இதில், சுமார் 50-க்கும் மேற்பட்ட பக்தர்கள் பால்குடம் எடுத்து நேர்த்தி கடனை செலுத்தினர். அகில பாரத இந்து மகாசபா மாநில பொதுச்செயலர் சுப்புராஜ், பாஜக கோட்ட இணைப் பொறுப்பாளர் ராஜா, ஒன்றியத் தலைவர் சித்திரைவேல், நகரத் தலைவர் காசிராமன், மாநில வர்த்தக அணிச் செயலர் ஈஸ்வரன், கள்ளர் முரசு ஆசிரியர் தியாகராஜன், ஒளிமுத்து மற்றும் பலர் கலந்துகொண்டனர்.