கொங்கராயகுறிச்சியில் உள்ள சிவகாமி சமேத வீரபாண்டிஸ்வரர் ஆலயம் மிகவும் பழமையானது. இந்த கோயில் 1876 ல் வந்த தாமிரபரணி ஆற்று வெள்ளத்தில் பூமிககுள் மூழ்கி விட்டது. அதன் பின் பகதர்கள் படிப்படியாக திருப்பணி செய்து இந்த ஆலயத்தினை வெளிககொண்டு வந்தனர். தற்போது இங்கு பூஜை முறையாக நடந்து வருகிறது. இங்குள்ள சட்டநாதர் என்னும் பைவரர் மிகவும் சிறப்பு வாய்ந்தவர். இவரை வணங்க கேரள மாநிலத்தில் இருந்தும் பகதர்கள் வந்த வண்ணம் உள்ளனர். அத்ரி மலையில் இருந்து கொடிமரம் இங்கு கொண்டு வந்து பிரதிட்சை செய்யப்பட்டுள்ளது.
இக்கோயிலில் அஷ்டமி பூஜை மிகச்சிறப்பாக நடந்தது. இதற்காக காலையில் நடைதிறக்கப்பட்டு, சிறப்பு அபிசேகம்,அலங்காரம் சிறப்பு பூஜை நடந்தது. மாலை வேளையில் அஷ்டமி பூஜை நடந்தது. இதற்காக பைரவருக்கு சிறப்பு அபிசேகம் , அலங்காரம் ஆராதனை நடந்தது. இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர்.


