
ஸ்ரீவைகுண்டம் அனைத்து வியாபாரிகள் சங்க கூட்டம் தலைவர் காளியப்பன் தலைமையில் நடைபெற்றது.
பொருளாளர் லட்சுமணன், சட்ட ஆலோசகர் முத்துராமலிலிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். துணைத்தலைவர் கந்தசிவசுப்பு வரவேற்றார்.கூட்டத்தில், மறைந்த சங்கச் செயலர் தங்கவேல் என்ற மணிக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து சங்கச் செயலராக ராமமூர்த்தி தேர்வு செய்யப்பட்டார்.
இதில், கோடை காலத்தை முன்னிட்டு ஸ்ரீவைகுண்டம் அணையில் இருந்து தொழிற்சாலைகளுக்கு தண்ணீர் எடுக்க தடை விதிக்கவேண்டும் என்பது உள்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. துணைச்செயலர் பாலசுப்பிரமணியன் மற்றும் சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள் பலர் கலந்துகொண்டனர்.