தூத்துக்குடியில் பல்வேறு தனியார் தொழிற்சாலைகள் இயங்கி வருகிறது. இந்த தொழிற்சாலைகளுக்கு தாமிரபரணி ஆற்றில் இருந்து தண்ணீர் கொண்டு செல்லப்படுகிறது.
இந்நிலையில் ஸ்டெர்லைட் மூலம் தூத்துக்குடி மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக புகார் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் கடந்த 1 மாத காலத்திற்கும் மேலாக ஸ்டெர்லைட்டுக்கு எதிரான போராட்டம் தீவிரமாகியுள்ளது. இந்நிலையில் இன்று தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் நிறுவத்திற்கு எதிராக 3000க்கும் மேற்பட்ட கடைகளை அடைத்து போராட்டம் நடத்த உள்ளதாக பொதுமக்களும், வியாபாரிகளும் தெரிவித்திருந்தனர்.
அதற்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக ஸ்ரீவைகுண்டம் வியாபாரிகள் சங்கம் சார்பில் 350க்கும் மேற்பட்ட கடைகள் அனைத்து இன்று அடைக்கப்பட்டது. இதனால் ஸ்ரீவைகுண்டம் பேருந்து நிலையம் மற்றும் முக்கிய வீதிகள் வெறிச்சோடி காணப்பட்டது.


