தூத்துக்குடி துறைமுக கடற்கரை மணப்பாடு கடற்கரையில் வான், கடல், நில சாகச விளையாட்டுகள் மார்ச் 02 முதல் 04ம் தேதி வரை நடைபெற உள்ளது. மாவட்ட ஆட்சித்தலைவர் என்.வெங்கடேஷ் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்ததாவது:-
கோயம்புத்தூரிலுள்ள வான் விளையாட்டு அறிவியில் மையம் – பாரா சைலிங் , பாரா கிளைடிங் , பவர் ஹேங் கிளைடிங் போன்ற வான் சாகச விளையாட்டுகளை நடத்தி வருகிறது. அரசின் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளிலும் கோயம்புத்தூரிலுள்ள வான் விளையாட்டு அறிவியில் மையம் கலந்து கொண்டு இவ்விளையாட்டின் மூலம் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது.
அதன் அடிப்படையில் இந்நிகழ்ச்சிகளை வரும் மார்ச் 2 முதல் 4 வரையிலான மூன்று நாட்கள் விளையாட்டினை ஊக்கப்படுத்தும் விதமாக பின்வரும் விளையாட்டுக்கள் நடத்தப்பட உள்ளன.பார சைலிங்க், அக்குவா சைலிங்க்,ஸ்சார்பிங் ,கமோண்டோ நெட்,ரிவர் கிராஸ்ஸிங் போன்ற சாகச விளையாட்டுகள் ஸ்பிக் நிறுவனத்துடன் இணைந்து நடத்தப்பட உள்ளது.
விளையாட்டுகளில் பங்கேற்கவும், பார்வையிடவும் கட்டணம் ஏதும் வசூலிக்கப்படமாட்டாது. உரிய பாதுகாப்பு வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. பொதுமக்கள் பங்கேற்று சாகச விளையாட்டுகளை முழு பாதுகாப்புடன் விளையாடலாம். மருத்துவ வசதி மற்றும் மீட்பு படையினர் வசதியும் செய்யப்பட்டுள்ளது. தூத்துக்குடி துறைமுக கடற்கரை மற்றும் மணப்பாடு கடற்கரை ஆகிய இரண்டு இடங்களிலும் விளையாட்டுகள் காலை 8 மணிக்கு துவங்கி 11 மணி வரையிலும், மாலை 4 மணிக்கு மீண்டும் துவங்கி 6.30 மணி வரையிலும் நடைபெறும்.
மகளிர் திட்டம், மீன் வளத்துறை மற்றும் ஆவின் ஆகிய துறைகள் மூலம் பொதுமக்களுக்கு தேவையான சிற்றுண்டி வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. முதல் நாள் 02 ம் தேதி அன்று காலை 8.00 மணிக்கு சாகச விளையாட்டுகளின் துவக்க விழா நிகழ்வு நடைபெற உள்ளது. செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கலந்து கொண்டு விளையாட்டுகளை துவக்கி வைப்பார்கள்.
பொதுமக்கள், மாணவ, மாணவியர்கள் இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்தி சாகச விளையாட்டுகளில் பங்கேற்கவும், கண்டு களிக்கவும்; அன்புடன் அழைக்கிறார்கள்.
பொதுமக்கள், மாணவ, மாணவியர்கள் இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்தி சாகச விளையாட்டுகளில் பங்கேற்கவும், கண்டு களிக்கவும்; அன்புடன் அழைக்கிறார்கள்.