வல்ல நாட்டில் நலிவடைந்த காசநோயாளிக்குத் தையல் இயந்திரம் வழங்கப்பட்டது.
தேசிய காசநோயகற்றும் திட்டம், தூத்துக்குடி மாவட்டம் வல்ல நாடு காசநோய் ̃பிரிவு சார்பாக நலிவடைந்த காசநோயாளியின் குடும்ப உறுப்பினருக்கு தையல் இயந்திரம் வழங்கும் நிகழ்ச்சி வல்ல நாடு அரசு ஆரம்பச் சுகாதார நிலையத்தில் வைத்து நடந்தது. துணை இயக்குநர் ̃மருத்துவ பணிகள் (காசநோய்) டாக்டர் ̃சுந்தர லிங்கம் தலைமை வகித்தார்.
̃
வட்டார மருத்துவ அலுவலர் ̃ டாக்டர் ̃மு. சுந்தரி, சித்த மருத்துவ அலுவலர் ̃டாகடர் செல்வகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தன.
வல்ல நாடு காசநோய் பிரிவு முதுநிலை சிகிச்சை மேற்பார்வையாளர் அ.அப்துல் ரகீம் ஹீரா வரவேற்றார். நலிவடைந்த காசநோயாளி குடும்பத்திற்குத் தையல் இயந்திரம் வழங்கப்பட்டது.
இதில் மாவட்ட தீர்வு முறை அமைப்பாளர் குப்புசாமி, ஆய்வக நுட்பநர் ராஜேஸ்வரி, செல்லப்பா மற்றும் சுகாதாரத்துறை பணியாளர்கள் கலந்துகொண்டனர். பல்நோக்கு மருத்துவமனை பணியாளர் மு.வேம்பன் நன்றி கூறினார். இதற்கான ஏற்பாடுகளை வல்ல நாடு காசநோய் பிரிவு முதுநிலை சிகிச்சை மேற்பார்வையாளர் அப்துல்ரஹீம்ஹீரா செய்திருந்தார்.
படம் உள்ளது.


