வல்லநாட்டில் காசநோயாளிகளுக்கு தினசரி மாத்திரை அறிமுகம் செய்யப்பட்டது.
வல்லநாடு அரசு ஆரம்ப சுகாதார நிலையததில் வைத்து உதவி மருத்துவஅலுவலர் டாக்டர் சந்தியா தலைமை வகித்தார். உதவி மருத்துவ அலுவலர் டாக்டர் செல்வகுமார் முன்னிலை வகித்தார். நம்பிக்கை மைய ஆற்றுப்படுத்துனர் ஐயம்மாள் வரவேற்றார். மாவட்ட நலக் கல்வியாளர் தங்கவேல் தினசரி மாத்திரைகள் வெளியிட்டார். உதவி மருத்துவ அலுவலர் டாக்டர் சந்தியா பெற்றுகொண்டார். வடக்க காரசேரியை சேர்ந்த பெருமாள், தெய்வசெயல்புரத்தினை சேர்நத ஹரிகிருஷ்ணன், மணக்கரையை சேர்ந்த ராமேஸ்வரன் ஆகியோருக்கு அரசு இடைக்கால நிவாரண உதவி தொகை வழங்க தாசில்தாருக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. உதவியாளர் அனந்தராமன் நன்றி கூறினார். ஏற்பாடுகளை முதுநிலை சிகிச்சை மேற்பார்வையாளர் அப்துல்ரஹீம் ஹீரா செய்திருந்தார்.