வல்லநாடு பகுதியில் நடந்த விபத்தில் தொழில் அதிபர் பலியானார். அவருடைய நண்பர் படுகாயம் அடைந்தார்.
நெல்லை மீனாட்சி புரம் பெரிய சாஸ்தா புலி தெருவை சேர்ந்தவர் சுப்பையா மகன் எஸ்.பி பாண்டியன்(வயது 57). நெல்லையை சேர்ந்த பிரபல தொழில் அதிபர். இவர் இன்று காலை 7 மணிக்கு வல்லநாடு அருகே தெய்வச்செயல்புரம் கோயிலுக்கு சாமி கும்பிட வந்தார். இவருடன் இவரின் நண்பர் உடையார்பட்டி எஸ்.என்.கே. தெருவை சேர்ந்த சங்கரன் மகன் ஆனந்த கிருஷ்ணனும்(48) உடன் வந்தார். இவரும் சாமி கும்பிட்டு விட்டு 8 மணி அளவில் நெல்லையே நோக்கி தங்களது காரில் கிளம்பினர். காரை தொழில் அதிபர் எஸ்.பி. பாண்டியன் ஓட்டி வந்தார். கார் முருகன்புரம் அருகே வந்த போல தடுமாறி பள்ளத்தில் பாய்ந்தது. இதில் கிள்ளிகுளம்வேளாண்மை கல்லூரி சார்பில் போடப்பட்டிருந்த வேலியை தாண்டி தலைகுப்புற கவிழ்ந்தது. அப்போது காரில் இருந்து எஸ்.பி. பாண்டியன் தூக்கி எரியப்பட்டார்.
சம்பவ இடத்திலேயே அவர் பலியானார். ஆனந்த கிருஷ்ணன் கார் இடிபாடுக்குள் சிக்கி கொண்டார். இது குறித்து தகவல் கிடைத்தவுடன் முறப்பநாடு போலிஸ் இன்ஸ்பெக்டர் விஜயகுமார், சப்இன்ஸ்பெக்டர் வேல்ராஜ்,சோனியா ஆகியோர் சம்பவ இடத்துக்கு வந்து இடிபாட்டுக்குள் சிக்கி உயிருக்குபோராடிய ஆனந்த கிருஷ்ணனை சிகிச்சைக்காக பாளை அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தானர். எஸ்.பி. பாண்டியன் உடலும் பாளை அரசு மருத்துவ மனைக்கு பரிசோதனைக்காக அனுப்பப்பட்டது. இதுகுறித்து முறப்பநாடு போலிசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்கள்.


