செய்துங்கநல்லூரில் கருங்குளம் ஒன்றிய அலுவலம் மற்றும் மின் அலுவலகத்தினை வசவப்பபுரம் இந்திராநகர் மக்கள் முற்றுகையிட்டனர்.
கருங்குளம் ஒன்றியம் வசவப்பபுரம் பஞ்சாயத்து உள்பட்ட கிராமம் இந்திரா நகர். இந்த ஊர் கடந்த 15 வருடங்களுக்கு முன்பு ஏற்படுத்தப்பட்ட ஊர். இந்த ஊருககு அடிப்படை வசதியான சாலை வசதி, மின் வசதி உள்பட எந்த வசதியும் செய்து தரப்படவில்லை. இதனால் பொதுமக்கள் திருவன் தலைமையில் கருங்குளம் ஒன்றியம் செய்துங்கநல்லூர் அலுவலகம் செய்துங்கநல்லூரில் இயங்கி வரும் இளநிலை மின் அலுவலகங்களை முற்றுகையிட்டு மனு கொடுத்தனர்.
இதுகுறித்து திருவன் கூறும்போது, எங்கள் கிராமத்தில் அடிப்படை வசதியே இல்லை. அதோடு மட்டுமல்லாமல் சாலை சேறுசகதியுமாக காட்சி தருகிறது. மின் கம்பி தலை மீது தட்டி விடும் அளவுககு கம்பி தாழ்வாக செல்கிறது . இப்பிரச்சனையை தீர்’க கோரி இன்று செய்துங்கநல்லூரில் உள்ள ஒன்றிய அலுவலகம் இளநிலை மின்அலுவலகத்தில் நாங்கள் முற்றுகையிட்டு மனு கொடுத்துள்ளோம். நடவடிக்கை எடுப்பதாக கூறியுள்ளார்கள்.
என்று கூறினார். விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இவ்வூர் மககள் எதிர்பார்ப்புடன் உள்ளனர்.