வசவப்பபுரம் நூலகத்தில் தேசிய அஞ்சலக வாரவிழா நடந்தது.
முதுநிலை அஞ்சல் கண்காணிப்பாளர் ஸ்ரீஜா தலைமை வகித்தார். உதவி அஞ்சல் கண்காணிப்பாளர் சுரேஷ் முன்னிலை வகித்தார். கிளை அஞ்சல் அதிகாரி ரேவதி வரவேற்றார்.
முதுநிலை அஞ்சல் கண்காணிப்பாளர் பேசும் போது, சிறு சேமிப்பு வாழ்ககையில் முககியமானது .அதுபோலவே அஞ்சலகத்தில் கணககு துவங்குவது எளிது. 50 ரூபாய் டெபாசிட்டில் கணக்கு துவங்கலாம். டெபாசிட் செய்து நல்லது பெறலாம். எனவே அனைவரும் அஞ்சலகத்தில் சேமிப்பு கணக்கை துவங்க வேண்டும் என பேசினார். அதிக கணக்கு துவங்கிய ஏஜெண்டு, கிளை அஞ்சல் அதிகாரி, தபால்காரர் ஆகியோருக்கு பரிசு வழங்கப்பட்டது. உட்கோட்ட அஞ்சல் ஆய்வாளர் பாலாஜி, முன்னாள் துணை சேர்மன் உடையார், மெயில் ஓவர்சீயர் பரமானந்தம், பரமசிவம், கிளை அஞ்சல் அதிகாரி குமார், சங்கரநாரயணன், உள்பட பலர் கலந்து கொண்டனர்.
தபால் பட்டுவாடா அலுவலர் சுப்பையா நன்றி கூறினார்.