வல்லநாடு அருகே உள்ள முறப்பநாடு மேலத்தெருவை சேர்ந்தவர் பேச்சி. இவரது மகன் பொன்ராஜ்(28). இவர் பாளையங்கோட்டையில் உள்ள கார் கம்பெனியில் மெக்கானிக்காக வேலை பார்த்து வருகிறார். நேற்று காலை 9 மணி அளவில் இவர் முறப்பநாட்டில் இருந்து வேலைக்கு தனது இருசக்கர வாகனத்தில் வேலைக்கு கிளம்பினார். அவர் தூத்துக்குடி நான்குவழிச் சாலையில் ஏறியபோது தூத்துக்குடியில் இருந்து நெல்லைக்கு வந்து கொண்டிருந்த அரசு பேருந்து அவர் மீது மோதியது. உயிருக்கு மோசமான நிலையில் அவரை பாளை அரசு மருத்துவமனையில் சேர்ந்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.
இதுகுறித்து முறப்பநாடு இன்ஸ்பெக்டர் விஜயகுமார் வழக்குபதிவு செய்து பஸ்ஸை ஓட்டி வந்த தென்கலம் புளியங்கொட்டாரம் தெற்குதெருவைச் சேர்ந்த சரவணகுமார் (43) என்பவரை கைது செய்தார்.
இறந்த பொன்ராஜ்க்கு 8 மாதத்துக்கு முன்பு தான் திருமணம் நடந்தது. இவர் மனைவி தற்போது கர்ப்பிணியாக உள்ளார். அவர் கதறி அழுதது அனைவர் மனதையும் கரைய செய்தது.