தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே பேய்க்குளத்தில் விவசாய நிலங்களுக்கு தண்ணீர் தர மறுத்த பொதுப்பணித்துறை உதவி பொறியாளரைக் கண்டித்து பாரதிய ஜனதா கட்சி சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம். தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் சுற்றுவட்டார பகுதியில் போதிய மழை பெய்துள்ள நிலையில் மணிமுத்தாறு அணையின் நீர்மட்டம் 116 அடி உள்ளது. இந்நிலையில் மணிமுத்தாறு மூன்றாவது நான்காவது ரீச் குளங்களுக்கு தண்ணீர் திறக்கப்படவில்லை. இது குறித்து பொதுப்பணித்துறை உதவி பொறியாளரிடம் விவசாயிகள் பேசிய போது பணம் தந்தால் மட்டுமே தண்ணீர் திறக்கப்படும் என்று தண்ணீர் திறந்துவிட மறுத்துள்ளார். இதனால் பாரதிய ஜனதா கட்சி மற்றும் விவசாயிகள் தமிழக அரசையும், பொதுப்பணித்துறை உதவி பொறியாளரையும் கண்டித்து பேய்க்குளத்தில் கண்டன ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் சுமார் 300க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். விரைவில் தேவையான அளவு தண்ணீர் திறந்து விடாத பட்சத்தில் மிகப் பெரிய போராட்டங்கள் நடைபெறும் என தெரிவித்தனர்.