தூத்துக்குடி மாவட்டத்தில் அனைத்து ஊராட்சி ஒன்றியப் பகுதிகளிலும் 60,000 பனங்கொட்டைகள் ஊன்றும் திட்டத்தினை மாவட்ட ஆட்சியர் என்.வெங்கடேஷ் துவக்கி வைத்தார்.
தமிழ்நாடு மாநிலத்தின் அடையாளமாக அறிவிக்கப்பட்ட பனைமரத்தின் அனைத்து பாகங்களும் மக்களுக்கு பயன்பட்டு வருவதாலும், பனைமரத்தின் மூலம் பதநீர், நுங்கு, கற்கண்டு, கருப்பட்டி, பனைவிசிறி மற்றும் குழந்தைகளுக்கான விளையாட்டு பொருட்கள் பயன்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் கடந்த காலங்களில் மண் அரிப்பை தடுப்பதற்கும், மழைநீரை அதிக்கபடுத்துவதற்கும் பனைமரங்களை விவசாயிகள் அதிகளவு உற்பத்தி செய்து வந்துள்ளனர்.
மாவட்ட ஆட்சியரின் சீரிய முயற்சியால் தூத்துக்குடி மாவட்டத்தில் அனைத்து ஊராட்சி ஒன்றியப் பகுதிகளிலும் 60,000 பனங்கொட்டைகள் ஊன்றுவதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம், முடிவைத்தானேந்தல் ஊராட்சியில் ஆலங்குளம் கண்மாய், வர்த்தகரெட்டிபட்டி ஊராட்சி, அரசன்குளம் கண்மாய் மற்றும் கருங்குளம் ஊராட்சி ஒன்றியம், கீழவல்லநாடு ஊராட்சி முருகன்புரம் அருகில் இலந்தைகுளம் ஆகிய பகுதிகளில் பனங்கொட்டைகள் ஊன்றும் திட்டத்தினை மாவட்ட ஆட்சியர் என்.வெங்கடேஷ் நேற்று துவக்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில், சார் ஆட்சியர், தூத்துக்குடி, திட்ட இயக்குநர், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை, உதவி இயக்குநர்(ஊராட்சிகள்), மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(வேளாண்மை) மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர்கள்(கி.ஊ / வ.ஊ) ஆகியோர் உடன் இருந்தனர். அதனை தொடர்ந்து அனைத்து ஊராட்சி ஒன்றியங்களிலும், குளம்/கண்மாய் ஓரங்களில் முதற்கட்டமாக 7000 பனங்கொட்டைகள் ஊன்றப்பட்டது.