
நீண்ட நாள்களுக்கு பிறகு ஒரே இடத்தில் 5 மணி நேரம் அமர்ந்து ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. எனது மைத்துனர் வல்லகுளம் கணேசன் – பிரேமா தம்பதிகளின் மகன் சுதன் & ரேவதி திருமணத்தில் தான் அந்த வாய்ப்பு கிடைத்தது. இரவு 7 மணிக்கு திருமண வரவேற்பில் போய் அமர்ந்தேன். தொடர்ந்து அண்ணன் இட்டமொழி சந்திரன் இசைக்கச்சேரி நடந்தது. அவருக்கும் எனக்கும் கடந்த 25 ஆண்டுகளாக பழக்கம். அவர் எங்கள் குடும்பத்து நிகழ்ச்சிக்கு வந்து சிறப்பு சேர்த்தற்கு மிக்க நன்றி. அதன் பின் இரவு 11 மணிக்கு மணமக்களுக்கு வரவேற்பு நிகழ்ச்சி. மணமக்களை வாழ்த்தி பேசினேன். மகன், மகள், மருமகன்கள், மருமகள்கள், பேரன், பேத்தி, மற்றும் இளைஞர்கள் கூட்டம் என குடும்பத்தார்களோடு அமர்ந்து நடத்திய ஒரு அருமையான நிகழ்ச்சி. 21 வயதில் தாமிரபரணி ஆற்றங்கரை மணலில் ஓடித்திரிந்த அந்த காலங்களை எல்லாம் நிகழ்ச்சியில் பேசும் போது நினைத்து பார்க்க சந்தர்ப்பம் கிடைத்தது.
தொடர்ந்து 5 மணி நேரம் அங்கேயே அமர்ந்து இருந்தாலும் அரை மணி நேரத்தில் காலங்கள் கடந்து சென்றது போலவே என் மனதுக்குள் இருந்தது. நல்ல வாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்த அனைவருக்கும் நன்றி.