நாட்டார்குளத்தில் குருத்தோலை பவனி நடந்தது.
செய்துங்கநல்லூர் ஆர்.சி.பங்குக்கு உள்பட்ட புனித பிரகாசிம்யமாள் ஆலயத்தில் குருத்தோலை ஞாயிறு பவனி நடந்தது. இதையொட்டி அதிகாலை சிறப்பு திருப்பலி நடந்தது. திருப்பலி முடிந்தவுடன் குருத்தோலை பவனி துவங்கியது. பங்கு தந்தை ஆரோக்கிய லாசர் அடிகளார் தலைமை வகித்தார். பவனி ஆர்.சி.தெரு, மெயின்ரோடு வழியாக மீண்டும் கோயிலை வந்தடைந்தது.
நாட்டார்குளம் ஆர்.சி.பங்குக்கு உள்பட்ட புனித சூசையப்பர் ஆலயத்தில் குருத்தோலை ஞாயிறு பவனி நடந்தது. இதையொட்டி அதிகாலை சிறப்பு திருப்பலி நடந்தது. அதன் பின் வேளாங்கண்ணி கெவி முன்பு மக்கள் திரண்டனர். அங்கு சிறப்பு திருப்பலி நடந்தது. பின் பங்கு தந்தை சார்பில் குருத்தோலை பவனியை துவக்கினர். பங்கு தந்தை இருதய சாமி அடிகளார் தலைமை தாங்கினார்.