
தென்காசி-கடையம் பிரதான சாலையில் அமைந்துள்ள தோரணமலை முருகன் கோவில் வளாகத்தில் சித்திரை திருநாளையொட்டி பண்கலை வித்தகர்களுக்கு விருது வழங்கும் விழா நடந்தது.
விழாவில் ஒயிலாட்ட கலைஞர் கைலாசமூர்த்தி, பல்சுவை கலைஞர் அருணா சிவாஜி, புத்தனேரி செல்லப்பா, நாடக கலைஞர் அருணாசலம், நெல்லை முத்தமிழ், செய்யதலை மணியன், கவிஞர் ஆழிகுடி துரைப்பாண்டியன், செங்கோட்டை நூலகர் ராமசாமி, கீழப்பாவூர் நூலகர் திருநாவுக்கரசி, இயற்கை பாதுகாவலர் சுரண்டை முருகன் ஆகியோருக்கு கோவில் பரம்பரை அறங்காவலர் ஆதிநாராயணன் விருதுகளை வழங்கினார்.
எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார். இதில் செண்பகராமன், லோட்டஸ் முருகன் உள்ளிட்டோர் கலந்துது கொண்டனர். முன்னதாக கோவிலில் விவசாயம் செழிக்கவும், விவசாயிகள் வாழ்வு வளம்பெற வேண்டியும் லட்சுமி குபேர ஆகர்சண ஹோமம் நடந்தது. இதில் திரளாக பக்தர்கள் கலந்து கொண்டனர்.