ஸ்ரீவைகுண்டம் அணைக்கட்டுப் பகுதியில் கடந்த ஏப்ரல் 14ம் தேதி மாபெரும் உணவுத்திருவிழா நடந்தது.
இந்த நிகழ்ச்சியில் ஏராளமான மக்கள் கலந்து கொண்டனர். இந்நிலையில் அணைக்கட்டுப்பகுதியில் உணவுத்திருவிழாவின் போது ஏற்பட்ட குப்பைகளை அகற்றவும், அணைக்கட்டு பகுதியை தூய்மை செய்யவும் இன்று காலை ஸ்ரீவைகுண்டம் மக்கள் நலச்சங்கம் சார்பில் இளைஞர்கள் கலந்து கொண்டு தூய்மை செய்தனர்.
மக்கள் நலச்சங்க தலைவர் ரமேஷ் தலைமையில் நடந்த இந்த தூய்மை பணியில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.


