திருநெல்வேலி வண்ணார்பேட்டை பிரான்சிஸ் சேவியர் பொறியியல் கல்லூரி டாக்டர் அப்துல் கலாம் அரங்கத்தில் வருகிற 29 ந்தேதி புதன்கிழமை மாலை 6.30 மணிக்கு தே விருது வழங்கும் விழா நடைபெறவுள்ளது. ஒருங்கிணைந்த நெல்லை மாவட்டத்தின் பல் துறை சாதனையாளர்களை கௌரவிக்கும் திருவிழா நடைபெறுகிறது. 10 துறைகளில் 14 ஆளுமைகளைத் தேர்ந்தெடுத்து விருது வழங்குகிறார்கள். விருது வழங்கி திருநெல்வேலி மாவட்ட ஆட்சித் தலைவர் வே.விஷ்ணு சாதனையாளர்களை கௌரவிக்கிறார். சிறப்பான கலை நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை நல்லதைப் பகிர்வது நம் கடமை நண்பர்கள் மன்றம் செய்து வருகிறது.


