சாத்தான்குளத்தில் தேசியமயமாக்கப்பட்ட வங்கியின் ஏடிஎம் பழுத டைந்துள்ளது, புதிய ஏடிஎம் மிஷின் வந்தும் இணைப்பு கொடுக்கப்படாததால் பூட்டியே கிடக்கும் ஏடிஎம்மால் பொதுமக்கள், வங்கி வாடிக்கையாளர்கள் பாதிப்பு அடைந்துள்ளனர்.
துாத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் இட்டமொழி ரோட்டில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கி வளாகத்தில் பணம் டெபாசிட் செய்வதற்கும், பணம் எடுப்பதற்கும் தனித்தனியாக சிடிஎம், ஏடிஎம் மிஷின் உள்ளது. இதில் ஏடிஎம் மி~ன் கடந்த இரண்டு மாதங்களாக பழுதாகியுள்ளது. அதற்கு பதிலாக தற்போது புதிய ஏடிஎம் மிஷின் வந்துள்ளது. டெக்னிசியன் வராததால் பார்சல் பிரிக்கப்படாமல் அப்படியே உள்ளது.
இதற்கிடையில் பணம் டெபாசிட் இயந்திரமும் பழுதடைந்துவிட்டது. இதனால் ஏடிஎம் மையம் ஷட்டர் இழுத்து மூடப்பட்ட நிலையில் உள்ளது. இதுபற்றி வங்கி வாடிக்கையாளர் ஜெயசிங் என்பவர் கூறியதாவது. பணம் டெபாசிட் மற்றும் பணம் எடுப்பதற்கும் இரண்டு மிஷின்கள் வங்கி வளாகத்தில் வெளியில் இருப்பதால் வங்கி வாடிக்கையாளர்கள் வங்கியில் காத்திருக்காமல் பணம் டெபாசிட் செய்யவும், பணம் எடுப்பதும் சுலபமாக செய்து கொண்டிருந்தார்கள்.
இதில் ஏடிஎம் மிஷின் ரிப்பேராகி பல வாரங்களாகிவிட்டன. அதற்கு பதிலாக புதிய ஏடிஎம் மிஷின் வந்தும் அதற்கு இணைப்பு கொடுக்கப்படாததால் வாடிக்கையாளர்கள் பணம் எடுக்க முடியாமல், பணம் எடுப்பதற்காக வங்கியிலேயே காத்திருக்க வேண்டியுள்ளது. மேலும் வங்கி நேரங்கள் தவிர பிற நேரங்களில் அவசர தேவைக்கு பணம் எடுக்க முடியவில்லை. குறிப்பாக மாதத்தின் முதல் வாரத்தில் மாத சம்பளம் பெறுவோர் அலுவலகத்திலிருந்து வந்த பின் ஏடிஎம்-ல் பணம் எடுப்பார்கள்.
தற்பொழுது ஏடிஎம் மிஷின் ரிப்பேரால் வங்கி நேரத்தில் பணம் எடுப்பதற்காக விடுப்பு எடுத்தோ அல்லது அனுமதி பெற்றோ வரவேண்டியுள்ளது. எனவே வங்கி வாடிக்கையாளர்களின் சிரமத்தை நீக்க புதிதாக வாங்கப்பட்டுள்ள ஏடிஎம் மிஷினை உடனடியாக இயக்க நடவடிக்கை எடுக்கவும், சிடிஎம் மிஷினை பழுது பார்க்கவும் நடவடிக்கை எடுக்குமாறு கூறினார்.