
தென் சீர்காழி என அழை க்கப்படும் கொங்கராயகுறிச்சி பொன்னுறுதி அம்மன் சமேத வீரபாண்டிஸ்வர கோயிலில் சட்டநாதரு க்கு தேய் பிறை அஷ்டமி விழா வருகிற 9 ந்தேதி நடைபெறுகிறது.
64 பைரவர்கள் சேர்ந்தவர் சட்டநாதர். சீர்காழியில் அமைந்து இருப்பது போலவே தென்னகத்தில் தாமிரபரணி ஆற்றங்கரையில் கொங்கராயகுறிச்சியில் மட்டுமே அமைந்துள்ளது. எனவே இந்த திருதல்த்தில் தென் சீர்காழி என அழை க்கிறாரகள். இந்த கோயிலில் தேய் பிறை அஷ்டமி வெள்ளிகிழமை (9.10.2020) அன்று மாலை 5 மணி க்கு நடைபெறுகிறது. இதற்காக 100 பேர் பால் குடம் எடுத்து வந்து, சிறப்பு பூஜை செய்கிறார்கள். இந்த பூஜையில் சங்கல்பம், விநாயகர் பூஜை வேதிகார்ச்சனை, ருத்ர பாராயணம், கால பைரவ மகாயாகம், த்ரவ்யாகுதி, மகா பூர்ணா குதி, சட்டநாதரு க்கு 64 திரவிய அபிசேகம், கலச அபிசேகம் ,அலங்காரம், தீபாராதனை மற்றும் பிரசாதம் வழங்கப்படும். இந்த நிகழ்ச்சியில் கருங்குளம் ஆன்நத கூத்தர் திரு க்கயிலாய வாத்ய குழுவின் கயிலை வாத்தியங்கள் இசை க்கப்படும். அதன் பின் அன்னதானம் நடைபெறும். அன்ன தான ஏற்பாடுகளை ஆஞ்சநேய பக்தர் கே.பி. மாறனும், கோயில் பூஜைகளை குணசேகரபட்டர் செய்து வருகிறார்.
&&&