சி.எஸ்‌ஐ. தூத்துக்குடி- நாசரேத் திருமண்டலத்தில் காலியாக உள்ள பேராயர் தெரிவு பட்டியலுக்கான தேர்தல் கடந்த செப்டம்பர் 9ம் தேதி நாசரேத் பரி. யோவான் பேராலயத்தில் வைத்து நடைபெற்றது.

இத் தேர்தலில் தூத்துக்குடி-நாசரேத் குருவானவர்கள் 10 பேர் போட்டியிட்டனர். இதில் எஸ்.டி.கே. அணி சார்பில் போட்டியிட்ட குருவானவர்கள் மோசஸ் ஜெபராஜ் 288, டி.ஜி.ஏ.தாமஸ் 284, தேவராஜன் 250, நவராஜ் 237 வாக்குகளும் பெற்று நால்வரும் பேராயர் தேர்வு பட்டியலுக்கு தெரிந்தெடுக்கப்பட்டனர்.

இந்நிலையில் இன்று சென்னையில் நடைபெற்ற சி.எஸ்.ஐ. சினாடு பேரவை கூட்டத்தில் தூத்துக்குடி- நாசரேத் திருமண்டலத்தின் 3 வது பேராயராக குருவானவர் மோசஸ் ஜெபராஜ் தேர்வு பெற்றார்.

இதனைத் தொடர்ந்து நாளை நவம்பர் 25 ந் தேதி காலை 8:30 மணிக்கு நாசரேத் பரி. யோவான் பேராலயத்தில் நடைபெறுகிற பேராயர் அருட் பொழிவு ஆராதனையில் சி.எஸ்.ஐ. மாடரேட்டர் பேராயர் ரூபன் மார்க் தூத்துக்குடி- நாசரேத் திருமண்டல புதிய பேராயர் மோசஸ் ஜெயராஜ் – க்கு அபிஷேகம் செய்கிறார். பின்னர் புதிய பேராயர் மோசஸ் ஜெபராஜ் பேராயர் ஆசனத்தில் அமர்த்தும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

இந் நிகழ்ச்சியில் ஆந்திரா, கர்நாடகா, கேரளா, மற்றும் தமிழ்நாட்டை சேர்ந்த பேராயர்கள் கலந்து கொள்கின்றனர்.