தூத்துக்குடி மாவட்டத்தின் ஆயிரக்கணக்கான ஊர்களுக்கு ஸ்ரீவைகுண்டம் பகுதியில் இருந்து கூட்டு குடிநீர் திட்டங்கள் மூலம் குடிநீர் வருகிறது.
ஆற்றில் அமைக்க பட்டுள்ள உறைகிணறுகளில் இருந்து மின் மோட்டார்கள் மூலம் தண்ணீர் இறைத்து அனுப்புவது தான் குடிநீர் வடிகால் வாரியத்தின் பணி.
ஒவ்வோரு ஆண்டும் தாமிரபரணி ஆற்றில் வெள்ளம் வரும் காலங்களில் ஆற்றில் உள்ள உறைகிணறுகளில் மின் மோட்டார்களை இயக்க முடியாமல் குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் கோமா நிலைக்கு சென்று விடுகின்றனர்.
குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகளை பொறுத்த வரை ஆற்றில் வெள்ளம் வருகிறது என்ற காரணத்தால் தண்ணீர் வராது என்னும் ஒற்றை வார்த்தையை வைத்து சமாளித்து வருகின்றனர். (பத்தாதற்கு இந்த 10 நாளும் சம்பளத்துடன் கூடிய விடுமுறை )
ஆனால் உண்மையில் ஆயிரக்கணக்கான ஊர்கள் பாதிக்கபடுமே ,லட்சகணக்கான மக்கள் குடிநீர் இல்லாமல் அவதிபடுவார்களே என்ற எண்ணம் இந்த அதிகாரிகளுக்கு துளியும் கிடையாது.
அரசும் , குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகளும் நினைத்து இருந்தால் கூடுதலாக ஆற்றின் கரைகளில் உறைகிணறுகளை அமைத்து தண்ணீர் கொடுக்க முடியுமா? முடியாதா?….
இல்லை நாங்கள் ஆண்டுக்கு 10 நாள் “கோமா”வில் தான் இருப்போம் இது தான் எங்கள் வழமை என சொல்லாமல் சொல்கிறார்களா?
இவன்,
வே.குணசீலன்
உடன்குடி


