
தூத்துக்குடி மாவட்டத்தில் அமைந்துள்ள நவதிருப்பதிகளில் ஒன்றானதும் குரு ஸ்தலமாக விளங்கும்ஆழ்வார்திருநகரி ஆதிநாதர் ஆழ்வார் கோயிலில் தை அமாவாசையை முன்னிட்டு லட்சதீபம் ஏற்றப்பட்டது. தீப ஒளியில் ஆதிநாதர் கோயில் வளாகம் ஜொலித்தது. தை அமாவாசையை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் ஆழ்வார்திருநகரியில் உள்ள ஆதிநாத ஆழ்வார் கோயிலில் லட்சதீபம் ஏற்றப்படுவது வழக்கம். அதேபோல் தை அமாவாசையை முன்னிட்டு லட்ச தீபம் ஏற்றப்பட்டது. லட்ச தீபத்தை முன்னிட்டு மூலவர் சன்னதி முன்பு வைக்கப்பட்டிருந்த பெரியவிளக்கில் கோயில் சார்பில் முதலில் விளக்கேற்றப்பட்டது. அதனை தொடர்ந்து பக்தர்கள் கோயில் வளாகம் முழுவதும் அகல் விளக்குகளைவரிசையாகவும், பல வடிவங்களிலும் ஏற்றி வைத்தனர். இதனால் திருக்கோயில் வளாகமே தீபஒளியில் ஜொலித்தது. லட்ச தீப விழாவை முன்னிட்டு சுவாமி ஸ்ரீபொலிந்துநின்ற பிரான் திருக்கோயில் வளாகத்திற்குள் வலம் வந்தார். இதையொட்டி சுவாமிக்கு சிறப்பு அலங்காரம், தீபாராதனை,நடைபெற்றன.இவ் வழிபாட்டில் ஆழ்வார்திருநகரி எம் பெருமானார் ஜீயா் மற்றும் பொதுமக்கள், கோயில் நிர்வாக அதிகாரி உட்பட பலர் கலந்து கொண்டனர்.