தூத்துக்குடி மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு சார்பில், தூத்துக்குடி அருகே பேரூரணியில் உள்ள மாவட்ட சிறையில் சிறைவாசிகளுக்கு சட்ட அறிவு மற்றும் சட்ட விழிப்புணர்வு குறித்த முகாம் நடைபெற்றது.
மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழுச் செயலரான சார்பு நீதிபதி சு. சாமுவேல் பெஞ்சமின் தலைமை வகித்தார். சிறைக் கண்காணிப்பாளர் அர்ஜுனன் முன்னிலை வகித்தார். சிறைவாசிகளுக்கான உரிமைகள் – கடமைகள், சட்ட உதவி மையம் மூலம் கிடைக்கக்கூடிய உதவிகள், சிறைவாசிகளை ஜாமீனில் எடுக்கவும் அவர்களது வழக்கை நடத்தவும் சட்டப் பணிகள் ஆணைக்குழு மூலம் அரசுச் செலவில் வழக்கறிஞரை நியமிப்பது ஆகியவை குறித்தும் விளக்கப்பட்டது. முகாமில் கலந்துகொண்ட 170 சிறைவாசிகளில் சிலர் தங்களது சந்தேகங்களுக்கு விளக்கம் பெற்றுக்கொண்டனர்.