தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், தூத்துக்குடி மாவட்டப் பிரிவு சார்பில் மாவட்ட விளையாட்டரங்கத்தில் வைத்து தடகளம், கூடைப்பந்து, கால்பந்து, ஹாக்கி, வாலிபால் ஆகிய விளையாட்டுகளுக்கு 21 நாட்கள் 25.04.2018 முதல் 15.05.2018 வரை 21 நாட்கள் கோடைகால பயிற்சி முகாம் நடைபெற உள்ளது.
இந்த பயிற்சி முகாமில் கலந்து கொள்ளும் வீரர், வீராங்கனைகளுக்கு விளையாட்டு கழகங்களின் முறையான விதிமுறைப்படி, அறிவியல் அடிப்படையிலான பயிற்சி அளிக்கப்படுகிறது. இந்த பயிற்சி முகாமில் மாணவ, மாணவிகள் அனைவரும் கலந்து கொள்ளலாம். முற்றிலும் இலவசம். நுழைவு கட்டணம் இல்லை. என தூத்துக்குடி மாவட்ட விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் நலன் மற்றும் அலுவலர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.