இது குறித்து தெற்குரயில்வே மதுரை பிரிவு வெளியிட்ட செய்திகுறிப்பில் கூறியுள்ளதாவது, வ.எண்.56769 பாலக்காடு – திருச்செந்தூர் பயணிகள் ரயில் 05.07.2018 முதல் 14.07.2018 வரை கோவில்பட்டி மற்றும் திருநெல்வேலி இடையே திங்கள், செவ்வாய், வியாழன் மற்றும் வெள்ளி கிழமைகளில் பகுதிவாரியாக ரத்து செய்யப்படுகிறது. வ.எண்.56770 திருச்செந்தூர் – பாலக்காடு பயணிகள் ரயில் 05.07.2018 முதல் 14.07.2018 வரை திருநெல்வேலி மற்றும் கோவில்பட்டி இடையே திங்கள், செவ்வாய், வியாழன் மற்றும் வெள்ளி கிழமைகளில் பகுதிவாரியாக ரத்து செய்யப்படுகிறது. வ.எண்.56769 பாலக்காடு – திருச்செந்தூர் பயணிகள் ரயில் 15.07.2018 முதல் 31.07.2018 வரை சாத்துார் மற்றும் திருநெல்வேலி இடையே திங்கள், செவ்வாய், வியாழன் மற்றும் வெள்ளி கிழமைகளில் பகுதிவாரியாக ரத்து செய்யப்படுகிறது.
வ.எண்.56770 திருச்செந்தூர் – பாலக்காடு பயணிகள் ரயில் 15.07.2018 முதல் 31.07.2018 வரை திருநெல்வேலி மற்றும் சாத்துார் இடையே திங்கள், செவ்வாய், வியாழன் மற்றும் வெள்ளி கிழமைகளில் பகுதிவாரியாக ரத்து செய்யப்படுகிறது. வ.எண்.56769 பாலக்காடு – திருச்செந்தூர் பயணிகள் ரயில் 07.07.2018 முதல் 31.07.2018 வரை மதுரை மற்றும் திருநெல்வேலி இடையே புதன் மற்றும் சனிக்கிழமைகளில் பகுதிவாரியாக ரத்து செய்யப்படுகிறது. வ.எண்.56770 புதன் மற்றும் சனிக்கிழமைகளில் மதுரை ரயில் நிலை யத்திலிருந்து மாலை 4.05 மணிக்கு பதிலாக மாலை 6.30 மணிக்கு புறப்படும் .
வ.எண்.56770 திருச்செந்தூர் – பாலக்காடு பயணிகள் ரயில் 07.07.2018 முதல் 31.07.2018 வரை திருநெல்வேலி மற்றும் மதுரை இடையே புதன் மற்றும் சனிக்கிழமைகளில் பகுதிவாரியாக ரத்து செய்யப்படுகிறது. 05.07.2018 முதல் 14.07.2018 வரை வ.எண்.16191 தாம்பரம் – திருநெல்வேலி அந்த்யோதயா எக்ஸ்பிரஸ் கடம்பூர் ரயில் நிலையத்தில் 87 நிமிடங்கள் நிறுத்தி வைக்கப்பட்டு திருநெல்வேலி ரயில் நிலையத்திற்கு மாலை 04.50 மணிக்கு 80 நிமிடம் காலதாமதமாக சென்றடையும்.15.07.2018 முதல் 31.07.2018 வரை வ.எண்.16191 தாம்பரம் – திருநெல்வேலி அந்த்யோதயா எக்ஸ்பிரஸ் சாத்துார் ரயில் நிலையத்தில் 65 நிமிடங்கள் நிறுத்தி வைக்கப்பட்டு திருநெல்வேலி ரயில் நிலையத்திற்கு மாலை 04.50 மணிக்கு 80 நிமிடம் காலதாமதமாக சென்றடையும்.இவ்வாறு அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.