காரையார் பகுதியில் சுற்று பயணம் செய்த பாளையங்கோட்டை சேவியர் கல்லூரி விஸ்காம் முதலாமாண்டு மாணவர்கள் தாமிரபரணியை பாதுகாக்க உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.
பாளையங்கோட்டை சேவியர் கல்லூரி விஸ்காம் முதலாமாண்டு பயிலும் மாணவர்கள் 44 பேர் காரையாறு பகுதிக்கு பேராசிரியர் ஜோஸ்பின் பாபா தலைமையில் சுற்றுபயணம் மேற்கொண்டனர்.
அவர்கள் பாபநாசம் அணை, மயிலாறு மரப்பாலம், சொரிமுத்து அய்யனார் கோயில், பட்டவராயன் கோயில், அகத்தியர் அருவி, பாபநாசம் படித்துறை உள்பட பல பகுதியில் பார்வையிட்டனர். அவர்கள் பிளாஸ்டிக் இல்லாத உலகத்தினை உருவாக்குதல், தாமிரபரணி ஆற்றை மாசு இல்லாத ஆறாக உருவாக்க சபதம் ஏற்றனர். இவர்களுக்கு வழிகாட்டியாக எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு உடன் சென்றார். சொரிமுத்து அய்யனார் கோயிலில் சிங்கம் ஜமீன்தார் முருகதாஸ் தீர்த்தபதி ராஜா வாழ்க்கை, மணிமுழுங்கி மரம், சங்கிலிபூதத்தார், பட்டவராயன் வரலாறுகளை பகிர்ந்து கொண்டனர்.
அவர்களுக்கு சிங்கம்பட்டி ஜமீன்தாரின் நேர்முக உதவியாளர் கிட்டு விளக்கம் அளித்தார்.