கடந்த சில நாட்களுக்கு முன்பு தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த திரைப்பட இயக்குநர் அமீர் ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தை வன்முறை இயக்கம் என்று ஒருமையில் பேசியதை வன்மையாக கண்டித்து சாத்தான்குளம் ஒன்றிய இந்து முன்னணி சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் நடிகர் சத்தியராஜ், தமிமும் அன்சாரி, திருமுகன்காந்தி, வேல்முருகன், ஜெபஸ்டியான் சீமான், வெற்றிமாறன், பாரதிராஜா, வைரமுத்து, மற்றும் கெளதமன் ஆகியோருக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர்.
தமிழ் தமிழ் என்று சொல்லும் தமிழ் திரைப்பட துறை தமிழ் கதாநாயகிகளை வைத்து திரைப்படம் எடுக்காமல் இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னட மொழி கதாநாயகிகளை வைத்து திரைப்படம் தயாரிக்கிறார்கள். தமிழ் என்று சொல்லி பிரிவினையை உண்டாக்க நினைக்கிறார்கள் என்று இந்து முன்னணி மாநில துணைத்தலைவர் வி.பி.ஜெயக்குமார் கூறினார். இதில் 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.


