சாத்தான்குளம் ஒன்றியத்தில் பள்ளி செல்லா குழந்தைகள் மற்றும் மாற்றுத்திறனாளிகளை கண்டறிவதற்கு தலைமை ஆசிரியர்களுக்கான ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது.
சாத்தான்குளம் ஒன்றியத்தில் பள்ளி செல்லாத குழந்தைகள் மற்றும் மாற்றுத் திறனாளி குழந்தைகளை கண்டறிவது குறித்த ஆலோசனைக் கூட்டம் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் மற்றும் தூத்துக்குடி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அவர்களின் அறிவுறுத்தலின் படி மாவட்ட திட்ட அலுவலர் அவர்களின் வழிகாட்டுதலுடன் கொம்மடிக்கோட்டையில் நடந்தது.
இதில் அனைத்து தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளி தலைமையாசிரியர்களுக்கு வரும் கல்வி ஆண்டில் ஏப்ரல் 16ம் தேதி முதல் மே 24 வரை சாத்தான்குளம் ஒன்றியத்தில் உள்ள 24 பஞ்சாயத்துகளில் 195 குடியிருப்புகள் மற்றும் 15 வார்டுகளில் உள்ள பள்ளி செல்லா குழந்தைகள் மற்றும் மாற்றுத்திறனாளி குழந்தைகளை கண்டறிவதற்கான கணக்கெடுப்பு பணிகள் குறித்தும் ஆரம்ப கல்வி பதிவேடு புதிப்பித்தல் குறித்தும் எடுத்துரைக்கப்பட்டது. இக்கூட்டத்தில் கூடுதல் உதவி தொடக்க கல்வி அலுவலர் அர்ஜுன் மற்றும் வட்டார வளமைய மேற்பார்வையாளர் (பொ) மகேஸ்வரி அவர்கள் கலந்து கொண்டு கருத்துக்களை எடுத்துரைத்தனர்.மேலும் சம்மந்தபட்ட பகுதிகளின் பள்ளி லோண்மை கல்வி உறுப்பினர்கள் 6 முதல் 18 வயது வரை உள்ள பள்ளிசெல்லா குழந்தைகள் குறித்த தகவல்களைக் கூறி கணக்கெடுப்பிற்கு ஒத்துழைக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டது.


