கருங்குளம் ஒன்றியம் சேரகுளத்தில் கிரிட் மண் மாதிரி சேகரிப்பு முகாம் நடந்தது.
இந்த முகாமில் விவசாயிகள் நேரடியாக மண் மாதிரி செய்வது எப்படி எடுப்பது என்பது குறித்து ஆலோசனை வழங்கப்பட்டது.
இதற்கான மண் மாதிரியை வேளாண்மை அலுவலர் கனகராஜ் மண் பரிசோதனை செய்வது எப்படி என செயல் முறை விளக்கம் அளித்தார். ஏராளமான விவசாயிகள் தங்கள் நிலங்களில் மண் மாதிரி எடுக்க ஆர்வம் காட்டினர். இந்த நிகழ்ச்சயில் துணை வேளாண்மை அலுவலர் ஆனந்தன் உதவி வேளாண்மை அலுவலர் லூர்தின், செல்வ சுந்தரம்,, வட்டார தொழில் நுட்ப மேலாளர் ஜெபக்குமார், உதவி தொழில் நுட்ப மேலாளர் ரத்னம் பால் ஆகியோர் கலந்துகொண்டனர் இதற்கான ஏற்பாடுகளை கருங்குளம் வட்டார வேளாண்மை துறை செய்திருந்தது.


