செய்துங்கநல்லூர் அருகே நூதன முறையில் பைக் திருடப்பட்டது.
செய்துங்கநல்லூர் அருகே உள்ள கொள்ளீர் குளத்தினை சேர்ந்தவர் சந்தானம். இவரது மகன் ரவிச்சந்திரன்(30). இவர் சொந்தமாக அறுவடை இயந்திரம் வைத்து தொழில் செய்து வருகிறார். நேற்று முன்தினம் பகல் 11.30 மணியளவில் தனது வீட்டு முன் பைக்கை நிறுத்தி விட்டு வீட்டுக்குள் சாப்பிடச்சென்றார். திரும்பி வந்து பார்த்த போது அவரது பைக்கை காண வில்லை. மாறாக அங்கே வேறொரு பைக் நிறுத்தப்பட்டிருந்தது. யாரோ மர்மநபர் ரவிசந்திரனின் பைக்கை திருடிவிட்டு அதற்கு பதிலாக வொறாரு பைக்கை நிறுத்தி விட்டு சென்றுள்ளார். அந்த பைக்கிலும் வயரை அறுத்து பயன்படுத்தியுள்ளனர். எனவே அந்த பைக்கும் திருட்டு பைக்காக இருக்குமோ.. என சந்தேகத்துக்குறியதாக உள்ளது.
இதுகுறித்து ரவிசந்திரன் செய்துங்கநல்லூர் போலிசில் புகார் கூறினார். அவர்கள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.