செய்துங்கநல்லூர் ரயில் நிலையத்தின் மேற்கே வானிலை ஆராய்ச்சி நிலையம் பின்புறமுள்ள ரயில்வே தண்டவாளத்தில் ரயிலில் பாய்ந்து ஒருவர் தற்கொலை செய்து கொண்டார்.
இன்று காலை 7 மணிக்கு நெல்லையில் இருந்து திருச்செந்தூருக்கு பயணிகள் ரயில் ஒன்று கிளம்பியது. இந்த ரயில் 7.20 மணி அளவில் செய்துங்கநல்லூர் ரயில் நிலையத்துக்கு 1 கிலோ மீட்டருக்கு முன்புள்ள வானிலை ஆராய்ச்சி நிலையம் பின்புறம் வந்தது. அப்போது 40 வயது மதிக்கதக்க ஆண் ஒருவர் ரயிலுக்குள் பாய்ந்தார். இதனால் ரயில் நிறுத்தப்பட்டது. அதன் பின் நெல்லை ரயில்வே போலிசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. ரயில்வே போலிசார் சம்பவ இடத்துக்கு வந்து ரயிலில் அடிபட்டு இறந்தவர் உடலை கைபற்றி விசாரணை நடத்தி வருகிறார்கள். தலை சிதைந்த நிலையில் உள்ள அவருக்கு 40 வயது இருக்கும் வெள்ளை சட்டை அணிந்திருந்தார். கறுப்பு கலரில் கோடு போட்ட சாரம் கட்டியிருந்தார்.
இவர் தற்கொலை செய்து கொண்டரா. அல்லது வேறு ஏதாவது பிரச்சனையா என போலிசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இதனால் காலையில் திருச்செந்தூர் ரயில் செல்வதற்காக பூட்டப்பட்ட தாதன்குளம் ரயில்வே கேட், மீண்டும் திறக்கப்பட்டு, அரை மணி நேரம் தாமதாமாக மீண்டும் ரயில் செல்ல ஏதுவாக பூட்டப்பட்டது.