
செய்துங்கநல்லூரில் கலைஞர் பிறந்த நாள்விழாவை முன்னிட்டு திமுக தெருமுனை பிரச்சார கூட்டம் நடந்தது.
ஒன்றிய இளைஞர் அணி அமைப்பாளர் குமார் தலைமை வகித்தார். ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர் சிவகுமார், மாடசாமி என்ற மகேஷ், இசக்கி, சகாயராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ஜெகன், தலைமை கழக பேச்சாளர் குமரி மணிமாறன், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் ராமஜெயம், அனஸ், ஒன்றிய செயலாளர் நல்லமுத்து ஆகியோர் பேசினர்.
மாவட்ட பிரதிநிதிகள் சுடலைமணி, கணேசன், நம்பிபாண்டியன், ஒன்றிய நிர்வாகிகள் பட்டன், தாமஸ் பூபாலராயன், ஒன்றிய அணி நிர்வாகிகள் பட்டுராஜா உள்பட பலர் கலந்து கொண்டனர்.
அவை தலைவர் கொம்பையா நன்றி கூறினார்.