செய்துங்கநல்லூரில் ஆஷிபா கொலையை கண்டித்து குழந்தைகள் பதாகை ஏந்தி ஊர்வலம் நடந்தது.
செய்துங்கநல்லூர் ஜாமியா பள்ளிவாசல் ஜீனியர் பிரண்ட் அமைப்பின் சார்பில் நடந்த இந்த ஊர்வலத்துக்கு அபு தலைமை வகித்தார். முகைதீன் காதர் முன்னிலை வகித்தார். இந்த ஊர்வலத்தில் குழந்தை செல்வங்கள் பாதுகாப்பு கருதியும், குழந்தைகளின் வளமே தேசத்தின் வளம் என்ற கோஷம் எழுப்பி குழந்தைகள் சென்றனர். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.