வல்லநாடு அருகே உள்ள அனந்த நம்பிகுறிச்சி சாலையை சீரமைக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கருங்குளம் ஒன்றியம் மணக்கரை பஞ்சாயத்துக்கு உள்பட்ட கிராமம் அனந்தநம்பிகுறிச்சி. இந்த கிராமத்தில் சுமார் 500க்கு மேற்பட்ட மக்கள் வசிக்கிறார்கள். இவர்கள் விவசாய பணி, தாமிபரணி ஆற்றுக்கு செல்லுதல், சுடுகாட்டுக்கு செல்லுதல் போன் அத்தியவாசியமான பணிகளுக்கு இந்த சாலையை தான் பயன்படுத்தி வருகிறார்கள். அந்த சாலை மிக மோசமாக உள்ளது.
இதுகுறித்து பசுமை தமிழ் தலைமுறை தலைவர் சுகன் கிறிஸ்டோபர் கூறும் போது, மணக்கரை பஞ்சாயத்து அனந்தநம்பிகுறிச்சி கிராமத்தில் நலத்திட்ட உதவிகள் எதுவுமே சரியாக நடைபெறவில்லை. இங்குள்ள மக்கள் பெரிதும் பயன்படுத்தும் சாலை மிக மோசமாக உள்ளது. இந்த சாலையில் மக்கள் நடந்து செல்ல கூட முடியவில்லை. எனவே இந்த சாலையை சீர் செய்து தரவேண்டும் என அவர் கூறினார்.
இந்த சாலையை சீரமைத்து தரவேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


