சிறப்பு விளையாட்டு விடுதியில் மாணவர், மாணவியர் சேர்க்கைக்கு தகுதி வாய்ந்த விளையாட்டு வீரர்கள் விண்ணப்பிக்கலம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக ஆட்சியர் என்.வெங்கடேஷ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு அழைப்பு: தமிழக அரசு விளையாட்டுத் துறையின் கீழ் செயல்பட்டு வரும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் மூலமாக கல்லூரிகளில் பயிலும் மாணவ மாணவியர்களுக்கு விளையாட்டுத் துறையில் சாதனைகள் படைப்பதற்கு ஏற்ப விஞ்ஞான ரீதியான பயிற்சி மற்றும் தங்குமிட வசதியுடன் சத்தான உணவுடன் கூடிய சிறப்பு விளையாட்டு விடுதிகள் சென்னையில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
மாணவர்களுக்கான விளையாட்டு விடுதி – சென்னை நேரு விளையாட்டரங்கிலும், மாணவியருக்கான விளையாட்டு விடுதி – சென்னை நேரு உள் விளையாட்டரங்கிலும் செயல்பட்டு வருகின்றன.
விளையாட்டுத் தகுதிகள்
• மேற்காணும் சிறப்பு விளையாட்டு விடுதிகளில் உள்ள விளையாட்டுகளில் பயிற்சி பெற்று சிறந்த விளையாட்டு வீரராக விளங்குவதற்கு 12-ம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற /பயிலும் மாணவ மாணவியர் தகுதியுடையவர் ஆவர்.
• தனிப்போட்டிகளில் விண்ணப்பிப்பவர்கள் மாநில அளவில் குடியரசு/பாரதியார் தின விளையாட்டுப் போட்டிகள்/அங்கீகரிக்கப்பட்ட கழங்கள் நடத்தும் போட்டிகளில் முதல் மூன்று இடங்களில் வெற்றி பெற்றிருத்தல் வேண்டும் அல்லது தமிழ்நாடு அணியில் தேர்வு செய்யப்பட்டு தேசிய அளவில் (SGFI)/ கழகங்கள் Federation/National Games (தேசிய விளையாட்டுப்போட்டிகள்)/RGKA நடத்தும் போட்டிகளில் கலந்து கொண்டவர்களும் விண்ணப்பிக்கலாம்.
• குழுப் போட்டிகளில் விண்ணப்பிப்பவர்கள் மாநில அளவில் குடியரசு/பாரதியார் தின விளையாட்டுப் போட்டிகள் கழகங்கள் நடத்தும் போட்டிகளில் முதல் இரண்டு இடங்களில் வெற்றி பெற்றிருத்தல் வேண்டும். அல்லது மாநில அளவில் தேர்வு பெற்று தேசிய அளவில் அங்கீகரிக்கப்பட்ட இந்திய பள்ளிகள் விளையாட்டுக் கூட்டமைப்பு / கழகங்கள் தேசிய விளையாட்டுப்போட்டிகள் /ஊரக விளையாட்டுப்போட்டிகள் நடத்தும் போட்டிகளில் கலந்து கொண்டவர்களும் விண்ணப்பிக்கலாம்
• கையுந்து பந்து விளையாட்டில் 185 செ.மீ.க்கு மேல் உயரமுள்ள மாணவ / மாணவிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
2017-18-ம் ஆண்டிற்கான சிறப்பு விளையாட்டு விடுதியில் சேர்வதற்கு கீழ்க்காணும் விளையாட்டுகளில் மாணவர் / மாணவியர் சேர்க்கை நடைபெற உள்ளது.
மாணவர்கள் : 1.தடகளம் 2.கூடைப்பந்து 3. குத்துச்சண்டை 4. கையுந்துபந்து 5. பளுதூக்குதல் 6. வாள்சண்டை 7. இறகுபந்து 8. ஹாக்கி மற்றும் 9. துப்பாக்கிச்சுடுதல்
மாணவிகள் 1.தடகளம் 2. குத்துச்சண்டை 3. கையுந்துபந்து 4. கால்பந்து 5. பளுதூக்குதல் மற்றும்
6. ஜுடோ,
www.sdat.tn.gov.in என்ற இணைய தள முகவரியில், சிறப்பு விளையாட்டு விடுதி சார்பான விவரங்களை பற்றி தெரிந்து கொள்ளவும், விண்ணப்ப படிவத்தினையும் இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். அல்லது மாவட்ட விளையாட்டு அலுவலகத்திலிருந்து விண்ணப்பங்களை பெற்றுக் கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சமர்ப்பிக்க வேண்டிய கடைசி நாள். 18.02.2016.
மேலும் நிரப்பப்பட்ட விண்ணப்பங்கள் 18.04.2018 அன்று மாலை 5.00 மணிக்குள் மேலாளர், சிறப்பு நிலை விளையாட்டு விடுதி, அறை எண் 76, ஜவஹர்லால் நேரு விளையாட்டு அரங்கம், பெரியமேடு, சென்னை-600 003 என்ற முகவரியில் நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ கிடைக்குமாறு அனுப்ப வேண்டும்.
சிறப்பு விளையாட்டு விடுதியில் சேர விரும்பும் மாணவ / மாணவியருக்கான மாநில அளவிலான தேர்வு 18.04.2018 அன்று 1) சென்னை, ஜவஹர்லால் நேரு விளையாட்டரங்கம் (தடகளம் (ஆ/பெ), குத்துச்சண்டை(ஆ/பெ), கையுந்துபந்து (ஆ/பெ), பளுதூக்குதல் (ஆ/பெ), வாள்சண்டை(ஆ), துப்பாக்கிச் சுடுதல்(ஆ) கால்பந்து(பெ), ஜுடோ(பெ)) 2) சென்னை, நேரு உள் விளையாட்டரங்கம் (கூடைப்பந்து (ஆ)) 3) நேருப் பூங்கா விளையாட்டரங்கம் (இறகுப்பந்து (ஆ)) மற்றும் 4) சென்னை, மேயர் இராதகிருஷ்ணன் ஹாக்கி விளையாட்டரங்கம், வலைகோல்பந்து(ஆ)) ஆகிய இடங்களில் நடைபெறும். தேர்வுப் போட்டியில் கலந்து கொள்ளும் மாணவ/ மாணவிகள் 18.04.2018 அன்று காலை 8.00 மணிக்குள் சம்மந்தப்பட்ட மையத்தில் ஆஜராகுமாறு தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தால் தெரிவிக்கப்படுகிறது.


