சாத்தான்குளம் வட்டார இந்து புதிரை வண்ணான் சமுதாய மேம்பாட்டு சங்க நிர்வாகிகள் கூட்டம் மற்றும் நிர்வாகிகள் தேர்வு நடந்தது.
சாத்தான்குளம் வட்டாரம் சார்பில் தாய்விளையில் வைத்து நடந்த கூட்டத்துக்கு மாவட்ட தலைவர் அருள்ராஜ் தலைமை வகித்தார். கூட்டத்தில் நிர்வாகிகள் தேர்வு நடந்தது. பெரியசாமி தலைவராகவும், செயலாளராக கண்ணனும், பொருளாளராக முத்துக்குமாரும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். சாத்தான்குளம் வட்டத்தில் வசிக்கும் இந்து புதிரை வண்ணான் சமுதாய மக்களுக்கு மாணவ மாணவிகளுக்கு உடனே ஜாதி சான்று வழங்க வேண்டும். சமுதாய மக்களை இழிவாய பேசிய சாத்தான்குளம் தாசில்தார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மாவட்ட செயலாளர் சிவராமன் நன்றி கூறினார்.