
சாத்தான்குளம் பகுதி பள்ளிகளில் 69வது குடியரசு தினவிழா கொண்டாடப்பட்டது.
சாத்தான்குளம் அருகே உள்ள விஜயராமபுரம் முத்தாரம்மன் இந்து நடுநிலைப்பள்ளியில் நடந்த குடியரசு தினவிழாவுக்கு பள்ளி செயலாளர் திருமணி தலைமை வகித்து தேசிய கொடியேற்றினார். தலைமை ஆசிரியர் ஜெகதீசபாண்டி வரவேற்றார். இதில் மாணவ, மாணவிகளுக்கு பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடத்தி வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. இதில் ஆசிரியர்கள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர். உதவி ஆசிரியை சண்முகராஜ் நன்றி கூறினார்.சாத்தான்குளம் அருகே உள்ள அதிசயபுரம் தூ.நா.தி.அ.க நடுநிலைப்பள்ளியில் நடந்த குடியரசு தின விழாவுக்கு தலைமை ஆசிரியர் செல்லப்பா தலைமை வகித்தார். பெற்றோர் ஆசிரியர் கழகத்தலைவர் வில்சன் தேசிய கொடியேற்றி இனிப்பு வழங்கினார். உதவி ஆசிரியை ஜெனிபர் வரவேற்றார். பள்ளி மாணவர்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கப்பட்டது. இதில் சேகர செயலாளர் எட்வின், முன்னாள் மாணவர் செயலாளர் அப்பாத்துரை, உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். உதவி ஆசிரியை கோல்டா நன்றி கூறினார். சாத்தான்குளம் அருகே உள்ள கொம்பன்குளம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் சாத்தான்குளம் ஒன்றியம் கொம்பன்குளம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் நடந்த 69 வது குடியரசு தினவிழா விழாவிற்கு ஊர்ப்பெரியவர் பேச்சிமுத்து தலைமை வகித்து கொடியேற்றினார்.தலைமை ஆசிரியர் ஆல்வின் வரவேற்றார்.விழாவில் மாணவ-மாணவியர்களின் கலைநிகழ்ச்சிகள் நடந்தது.பள்ளிக்குழந்தைகளுக்கு பரிசுகள் பல்வேறு போட்டிகள் நடத்தி வழங்கப்பட்டடன.பள்ளி வளாகத்தில் 27 மரக்கன்றுகள்நடப்பட்டன.விழாவில் பள்ளி மேலாண்மைக் குழுத்தலைவர் சுப்புத்தாய், துப்புரவு பணியாளர்சக்திக்கனி,மாரிசெல்வி, பெற்றோர்கள் ஆறுமுகம்,முருகலெட்சுமி, இசக்கிமுத்து,மல்லிகா,இசக்கிபாண்டி, லிங்கபாண்டி, தங்கம், கலைச்செல்வன், ஆண்டி, சுந்தரி ஆகியோர் கலந்து கொண்டனர். உதவி ஆசிரியர் லெற்றீசியா நன்றி கூறினார்.
சாத்தான்குளம் அருகே உள்ள கண்டுகொண்டான்மாணிக்கம் உபகாரமாதா தொடக்கப்பள்ளியில் நடந்த விழாவுக்கு முன்னாள் நட்சத்திர அரிமா சங்க தலைவர் தங்கராஜ் தலைமை வகித்து தேசிய கொடியேற்றினார். அரிமா நந்தக்குமார் முன்னிலை வகித்தார். தலைமை ஆசிரியர் ஜாஷ்வா ஆசீர்ராஜ்நாயகம் வரவேற்றார். பின்னர் மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. சாத்தான்குளம் அருகே உள்ள வேலாயுதபுரம் ஆர்.சி. துவக்கப்பள்ளியில் நடந்த குடியரசு தினவிழாவுக்கு திருச்செந்தூர் எல்ஐசி வளர்ச்சி அதிகாரி கிறிஸ்டோபர் தலைமை வகித்து தேசிய கொடியேற்றினார். உதவி ஆசிரியர் செல்வராஜ் வரவேற்றார். பள்ளி தாளாளர் பபிஸ்டன் முன்னிலை வகித்தார்.மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் மற்றும் உடற்பயிற்சி நடந்தது. தலைமைஆசிரியை ஜேசுராஜகுமாரி நன்றி கூறினார். படுக்கப்பத்து அரசு மேல்நிலைப்பள்ளியில் நடந்த விழாவுக்கு தலைமை ஆசிரியர் நரசிம்மன் தலைமை வகித்தார். பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் வெற்றிவேல், முன்னாள் பஞ். துணைத் தலைவர் ஜெயராஜக்கனி, ஆகியோ¢ முன்னிலை வகித்தனர். தொழிலதிபர் சரவணன் தேசிய கொடியேற்றி இனிப்பு வழங்கினார். முன்னதாக படுக்கப்பத்து காமராஜர் சிலைக்கு மாலையணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதில் மனோ மார்த்தாண்டன் உள்ளிட்ட ஆசிரியர்கள் பலர் கலந்து கொண்டனர். தமிழ் ஆசிரியை நன்றி கூறினார். சாத்தான்குளம் கோமானேரி ஊராட்சியில் முன்னாள் பஞ். துணைத் தலைவரும், கலுங்குவிளை தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க துணைத் தலைவர் இசக்கிமுத்து தேசிய கொடியேற்றி இனிப்பு வழங்கினார். இதில் பஞ்சாயத்து செயலர்இசக்கியப்பன்,நியாயவிலை கடை ஊழியர்ராஜன் ,மற்றும் ஊராட்சி முன்னாள் உறுப்பினர்கள், மகளிர் குழு பொருப்பாளர்கள் ,பொது மக்கள் கலந்து கொண்டனர்