தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகே உள்ள எள்ளுவிளையைச் சேர்ந்தவர் மன்னராஜா(40). இவர் ஐதராபாத்தில் சமையல் மாஸ்டராக வேலை பார்த்து வருகிறார். இவரின் மனைவி உஷாராணி மற்றும் இரண்டு பெண்கள். அதில் ஒருவர் திருமணமாகி வெளியூர் சென்று விட்டார். ஒருவர் மட்டும் தனது அம்மாவுடன் எள்ளுவிளையில் வசித்து வருகிறார்.
இந்நிலையில் நேற்று இரவு மன்னராஜா மனைவி தனது மூத்த மகளை பார்ப்பதற்காக திருப்பூருக்கு சென்றுவிட்டார். இரண்டாவது மகள் மட்டும் வீட்டில் இரவு தனியாக இருக்க பயப்பட்டு அருகில் இருந்தவரின் வீட்டில் படுத்துக்கொண்டார். இன்று அதிகாலை அவர் வீட்டில் வந்து பார்த்த போது வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டிருந்தது. உள்ளே சென்று பார்த்த போது பீரோ உடைக்கப்பட்டிருந்தது. பீரோவில் இருந்து 20 பவுண் நகை திருடப்பட்டிருந்தது தெரியவந்தது. உடனே அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் தட்டார்மடம் காவல்நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். போலிசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரனை நடத்தி வருகின்றனர். இரவு வீட்டில் யாரும் இல்லாததை நோட்டமிட்ட திருடர்கள் வீட்டில் புகுந்து பீரோவை உடைத்து நகையை திருடிச்சென்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.