தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகே உள்ளது நடுவக்குறிச்சி ஊராட்சி. இந்த ஊர் விவசாயிகளுக்கு தருவை பகுதியில் சுமார் 500 ஏக்கருக்கும் மேற்பட்ட விவசாய நிலங்கள் உள்ளது. அங்கு அவர்கள் வாழை, நெல், பருத்தி போன்ற விவசாய பொருட்களை சாகுபடி செய்கிறார்கள்.
இந்த விவசாய நிலத்திற்கு மின்இணைப்பிற்காக மூன்று உயர்அழுத்த மின்கம்பங்கள் உள்ளது. இந்த விவசாய நிலத்தில் 50க்கும் மேற்பட்ட மின்கம்பங்கள் உள்ளது. இந்த மின்கம்பங்கள் அனைத்தும் விவசாய நிலத்தில் உள்ளதாலும் மேலும் இரு மின் கம்பங்களுக்கு இடையில் நீண்ட இடைவெளி உள்ளதாலும் மின் வயர்கள் அனைத்தும் தாழ்வாக செல்கிறது. மின் வயர்கள் அனைத்து நடந்து சென்றால் தலையில் தட்டும் வண்ணம் உள்ளது. இதனால் விவசாயிகள் அவசர கதியிலோ அல்லது உழவு தொழில் செய்யும் போது வந்தால் மின் வயர்களில் உரசி விபத்து ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இதனால் அச்சமடைந்த விவசாயிகள் சிலர் மிகவும் தாழ்வாக செல்லும் பகுதியில் இரு கம்புகள் மூலம் மின்வயரை தூக்கி நிறுத்தியுள்ளனர். இதுகுறித்து பல முறை நடுவக்குறிச்சி மின்வாரிய அலுவலகத்தில் தகவல் கொடுத்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
எனவே உயர்பலி ஏற்படும் முன் இந்த மின்வயர்கள் உயர்த்த வேண்டும் என்று பொதுமக்களும், விவசாயிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்.