
த்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகே உள்ள கோமானேரியைச் சேர்ந்தவர் முத்துக்குமார் மனைவி முருகம்மாள். முருகம்மாள் காலையில் உணவுக்காக தயிர் வாங்கி கொண்டு சமையலறையில் வைத்து விட்டு வீட்டு வேலைகளை செய்து கொண்டிருந்தார்.
அப்போது சமையல் அறையில் நுழைந்த காட்டுப்பூனை அந்த தயிரை சாப்பிட செம்பில் தலையை நுழைத்தது. தயிரை சாப்பிட்ட காட்டுப்பூனை அங்கிருந்து தப்பிக்க தலையை வெளியே எடுக்க முயற்சி செய்தது. ஆனால் செம்பில்இருந்து தலையை வெளியே எடுக்க முடியவில்லை. வீட்டு சமையல் அறையில் இருந்து வெளியே வந்த பூனை தலை மாட்டிக் கொண்டதால் சுவற்றில் முட்டி ஒருவழியாக ஊரின் தெருப்பகுதிக்கு வந்தது.
தெருப்பகுதிக்கு பூனை வந்ததால் ஊரில் உள்ள அனைவரும் வேடிக்கை பார்க்க ஆரம்பித்தனர். அதே ஊரைச் சேர்ந்த சுடலைமுத்து மனைவி பரதேசியம்மாள் என்பவர் காட்டுப்பூ¬னை மீட்க முற்பட்டார். ஆனால் பூனை அவரது கையில் பிரண்டியதால் ரத்தக்காயம் ஏற்பட்டது. சுத்தியல் கடப்பாரை போன்ற ஆயுதங்களால் அதனை வெளியே எடுக்க ஊர்க்காரர்கள் முற்பட்டனர்.
பின்னர் சுமார் 1 மணி நேர போராட்டத்திற்கு பிறகு அந்த காட்டுப்பூனையை வெளியே மீட்டனர். உடனே அந்த பூனை தப்பித்து காட்டுப்பகுதியில் சென்றது.
சாத்தான்குளம் பகுதியில் தயிர் செம்பில் பூனை சிக்கிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.