தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் பன்னம்பாறையில் அரசு உயர்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் இந்தப்பகுதியைச் சேர்ந்த 300க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த பள்ளி வளாகத்திற்குள் கிராம நிர்வாக அதிகாரி அலுவலகம், பஞ்சாயத்து அலுவலகம், மேலும் ஒரு தரப்பினருக்கு சொந்தமான கோவில் நுழைவு வாயில் உள்ளது.
இந்நிலையில் கடந்த 2 தினங்களுக்கு முன்பு இரு தரப்பைச் சேர்ந்த மாணவர்களுக்குள் மோதல் ஏற்பட்டது. இதனால் இன்று பள்ளிக்கு ஒரு பிரிவைச் சேர்ந்த 60க்கும் மேற்பட்ட மாணவர்கள் பள்ளிக்கு செல்லவில்லை.
இதுகுறித்து தகவல் அறிந்த சாத்தான்குளம் போலிசார் சம்பவ இடத்திற்கு சென்று பெற்றோர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அதன் பின்னர் மாணவர்களை பெற்றோர்கள் பள்ளிக்கு அனுப்பி வைத்தனர். இதனால் சற்று நேரம் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
===