தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகே உள்ள தட்டார்மடத்தைச் சேர்ந்தவர் வேலாயுதம்(70). இவருக்கு 3 மகன்களும், 1 மகளும் உள்ளனர். அனைவருக்கும் திருமணமாகிவிட்டதால் இவரும் இவரது மனைவியும் தட்டார்மடத்தில் தனியாக வசித்து வருகிறார்கள். இவர் ஆடு மாடுகளை மேய்த்து வருகிறார்.
வழக்கம் போல் இன்று காலை ஆடு மாடுகளை மேய்த்துக்கொண்டு வைரவன் தருவை பகுதியில் உள்ள காட்டுப்பகுதிக்கு சென்றுள்ளார். அப்போது அதே பகுதியில் மாடு மேய்த்து கொண்டிருந்த பெண் ஒருவர் வேலாயுதம் வெட்டுக்காயங்களுடன் இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த சாத்தான்குளம் டிஎஸ்.பி.ரவிசந்திரன் மற்றும் போலிசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அப்போது வேலாயுதம் கழுத்து, கையில் வெட்டுக்காயங்களுடன் கொலை செய்யப்பட்ட இறந்து கிடந்தார்.
போலிசார் கொலை செய்யப்பட்டு இறந்த வேலாயுதம் உடலை பிரேத பரிசோதனைக்காக சாத்தான்குளம் அரசு மருத்துவனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலிசார் வழக்கு பதிவு செய்து வேலாயுதத்தை கொலை செய்த கும்பலை வலைவீசி தேடி வருகின்றனர்.
ஆடு மாடு மேய்க்கச் சென்றவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தட்டார்மடம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.