
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் புலமாடன் செட்டியார் மேல்நிலைப்பள்ளியில் மாற்றுத்திறனுடையோருக்கான மாபெரும் சுயம்வரம் நடைபெற்றது.
இதில் ஏராளமான மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டு தங்களது முழு தகவல் அடங்கிய சான்றிதழ்களை பதிவு செய்தனர். பதிவு செய்தவர்களில் பொருத்தமான நபர் இருந்தால் அங்கேயே அவர்களை ஒருவருக்கொருவர் அறிமுகம் செய்து வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்டது. பொருத்தமான ஜோடிகளுக்கு சென்னையில் கவுன்சிலிங் கொடுக்கப்பட்டு முறையாக திருமணம் நடைபெரும். இன்று 200 மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டனர்.
இதில் இரண்டு ஜோடிகள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு முறையான ஆலோசனை கொடுக்கப்பட்டு நவம்பர் மாதம் திருமணம் நடைபெறும் என்று தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் சங்ககூட்டமைப்பு மாநில தலைவர் கூறினார்.