சாத்தான்குளத்தில் ஹரே ராமா ஹரே கிருஷ்ணா இயக்கத்தின் சார்பில் பகவத் கீதை உபன்யாசம் நடைபெற்றது.
ஹரே ராமா ஹரே கிருஷ்ணா பக்தி இயக்கம் சார்பில், பகவான் கிருஷ்ணரை போதித்து பல்வேறு பகவத்கீதை வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. சாத்தான்குளம் பிள்ளையார் கோயில் சன்னதி தெருவில் உள்ள தனியார் மண்டபத்தில் பகவத் கீதை வகுப்பு திங்கள்கிழமை நடைபெற்றது. இதில் திருச்செந்தூர் வேதநாராயணன்பிரபு பங்கேற்று பக்தர்களுக்கு உபன்யாசம் செய்தார். பின்னர் பக்தர்களின் கேள்விகளுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது. தொடர்ந்து பஜனை மற்றும் மங்கள ஆரத்தி நிகழ்ச்சி நடைபெற்றன. பின்னர் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.
இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.