தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகே உள்ள கிராமம் கருங்கடல். இந்த ஊரைச் சேர்ந்த 20க்கும் மேற்பட்டோர் சாத்தான்குளம் வட்டாச்சியர் அலுவலகத்தில் சாதிச்சான்றிதழ் கேட்டு விண்ணப்பித்திருந்தனர்.
பள்ளி மற்றும் முதியோர் உதவித்தொகை பெற என அனைத்திற்கும் சாதிச்சான்றிதழ் கேட்பதால் சாதிச்சான்றிதழ் கேட்டு விண்ணப்பித்திருந்தனர். ஆனால் சுமார் 3 மாத காலம் ஆகியும் இன்று வரை அவர்களுக்கு சாதிச்சான்றிதழ் வழங்கப்படவில்லை.
இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் இன்று கிராம நிர்வாக அதிகாரி மற்றும் வட்டாச்சியரை கண்டித்து சுமார் 50க்கும் மேற்பட்டோர் வட்டாச்சியர் அலுவலகத்தினை முற்றுகையிட்டனர். இதனால் சற்று நேரம் பரபரப்பு ஏற்பட்டது. வட்டாச்சியர் இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்த பின்னர் அவர்கள் அங்கிருந்து கலைந்த சென்றனர்.