கொங்கராயகுறிச்சி – ஸ்ரீவைகுண்டம் சாலையில் பயணிகள் முகத்தினை பதம் பார்க்கும் முள்செடிகளால் பயணிகள் அவதியுற்று வருகின்றனர்.
ஸ்ரீவைகுண்டத்தில் இருந்து கொங்கராயகுறிச்சிக்கு போக்குவரத்து மிக அதிகமாக உள்ளது. இந்த கிராமத்துக்கு அரசு பேருந்து இரண்டு இந்த வழியாக இயங்கி வருகிறது. இந்த சாலையில் தோழம்பண்ணை என்னும் இடத்தில் இருந்து கொங்கராயகுறிச்சி வரை சாலையின் இருபுறமும் புதர் மண்டிகிடக்கிறது. முள்செடிகள் வளர்ந்து பேருந்தின் ஜன்னல் ஓரம் அமர்ந்திருக்கும் பயணிகள் முகத்தினை பதம் பார்க்கிறது.
இதுகுறித்து ஆறாம்பண்ணையை சேர்ந்த சேக் அப்துல் காதர் கூறும் போது, எங்கள் கிராமத்துக்கு ஸ்ரீவைகுண்டத்தில் இருந்து இரண்டு அரசு பேருந்து கொங்கராயகுறிச்சி வழியாக இயங்குகிறது. இந்த பேருந்து ஜன்னல் ஓரத்தில் அமர்ந்து பயணம் செய்ய முடியாத அளவுக்கு முள்செடிகள் அடர்ந்து காணப்படுகிறது. இதனால் பயணிகள் முகத்தினை மூடிக்கொண்டு பயணம் செய்யும் அவல நிலை உள்ளது. நெடுஞ்சாலை துறை மூலமாக சாலை பணியாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். ஆனால் அவர்கள் யாரும் இங்கு பணியாற்றவில்லை. எனவே உடனடியாக சாலை ஓரம் உள்ள முள்செடிகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.