தூத்துககுடி மாவட்டம் வல்லநாடு அருகே உள்ள கீழப்புத்தனேரியை சேர்ந்த முருகன் மனைவி சிவகாமி(52). மாற்றுதிறனாளியான இவர் சற்று மனநிலை பாதிககப்பட்டிருந்தார். கடந்த 28 ந்«தி தூத்துககுடி பழைய பேருந்து நிலையத்தில் இவர் ஒரிடத்தில் அங்குமிங்கு அசையமுடியாமல் பாதுகாப்பற்ற நிலையில் இருந்தார். மாவட்ட சமூக நல அலுவலர் தனலட்சுமி தலைமையிலான குழு அந்த பெண்ணை மீட்டு முடுககு மீண்டான் பட்டியை சேர்ந்த ஆகடிவ்மைண்ட்ஸ் ஆதரவற்ற பெண்கள் பாதுகாப்பு மையத்துககு அவரை பாதுகாப்பாக அனுப்பி வைத்தனர். நிறுவன நிர்வாகி தேன்ராஜா தலைமையில் ஊழியர்கள் அவரை கவனித்துவந்தனர். இதற்கிடையில் சிவகாமியின் உறவினர்கள் கீழப்புத்தனேரியில் இருப்பதை அறிந்தனர். அதன் பின் முறப்பநாடு சப் இன்ஸ்பெகடர் அஜில் மல் உதவியுடன் சிவகாமியை குடும்பத்தினரிடம் சேர்த்து வைத்தனர்.
தொண்டு நிறுவனத்தினை சேர்ந்த பொறப்பாளர்கள் சேர்மராஜன், தேவராஜன், உதவியாளர் மாரியம்மாள், பானுமதி ஆகியோர் உடனிருந்தனர்.