செய்துங்கநல்லூர் அருகே காவேரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி திமுக கூட்டணி கட்சியினர் சாலை மறியல் செய்தனர். 3 பெண் உள்பட 88 பேர் கைது செய்யப்பட்டனர்.
தமிழ்நாடு முழுவதும் காவேரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி திமுக கூட்டணி சார்பில் அனைத்து கட்சியினரும் போராட்டம் நடத்தி வருகின்றனர். செய்துங்கநல்லூரில் நேற்று காலை அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டு இருந்தது. பலத்த போலிஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. பேருந்து வழக்கம் போலவே உள்ளது. ஆட்டோ ஸ்டாண்டில் ஒரிரு ஆட்டோக்கள் ஓடியது. காலை 11 மணி அளவில் திமுக ஒன்றிய செயலாளர் நல்லமுத்து, மார்க்சிஸ்ட் கம்னியூஸ்ட் ஒன்றிய செயலாளர் அப்பாக்குட்டி, மனித நேய மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் மோத்தி முசப்பில், காங்கிரஸ் வட்டார தலைவர் ஆறுமுகம் தலைமையில் நான்கு கட்சியினை சேர்ந்தவர்கள் திரளாக திரண்டு வந்த செய்துங்கநல்லூர் பஜாரில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இந்த போரட்டத்தில் திமுக கட்சியை சேர்ந்த வடக்கு ஒன்றிய தலைவர் மகாராஜன், பொதுக்குழு முன்னாள் உறுப்பினர் பரமசிவன், முன்னாள் பஞ்சாயத்து தலைவர் சயைடகோபால், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் கோபல், கணேசன் , தாமஸ்பூபாலராயன், நம்பி உள்பட பலர் கலந்துகொண்டனர்.
அப்போது செய்துங்கநல்லூர் போலிஸ் இன்ஸ்பெக்டர் சோமன் ராஜன் தலைமையில் சப்இன்ஸ்பெக்டர் இன்னோஸ் குமார், சதீஷ், ரவிக்குமார் ஆகியோர் அடங்கிய போலிஸ் படை அவர்களை கைது செய்தனர். பின் அவர்கள் போலிஸ் வேனில் ஏற்றப்பட்டு குரு மகாலில் காவலில் வைத்தனர். மாலையில் அவர்கள் விடுவிக்கப்பட்டனர்.
மறியல் நடந்து கொண்டிருந்த போது திருச்செந்தூரில் இருந்து வந்த வாகனங்கள் செய்துங்கநல்லூர் காவல் நிலையம் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. அதில் நிறுத்தி வைக்கப்பட்ட அரசு பேருந்து திடிரென கிளம்பி வசவப்புரம் சாலைக்குள் நுழைந்தது. உடனே கட்சியனர் அந்த பேருந்தை ஓடிப்போய் மறிந்து முற்றுகையிட்டனர். அதையும் மீறி அந்த பேருந்து சென்றது. எனவே போராட்டகாரர்கள் பஸ் தகரத்தினை அடிந்து பேருந்தை நிறுத்தினர். இதனால் பெரும்பரப்பு ஏற்பட்டது. அதன் பின் பேருந்து நிறுத்தப்பட்டது.